தொகுதி பங்கீட்டுக்கு முன்பே புதுச்சேரியில் மனுதாக்கல் செய்த அரசியல் கட்சிகள்

தொகுதி பங்கீட்டுக்கு முன்பே புதுச்சேரியில் மனுதாக்கல் செய்த அரசியல் கட்சிகள்

தி.மு.க. 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரசிடம் வலியுறுத்தி வருகிறது.
Published on

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் ஒரேகட்ட மாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந் தேதி நடைபெற உள்ளது. இதைய டுத்து தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ் இடையே பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் மொத்த முள்ள 30 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களிலும், தி.மு.க. 13 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 2 தொகுதி களிலும், தி.மு.க. 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அதனால் இந்த முறை தி.மு.க. 15 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யக் கோரி காங்கிரசிடம் வலியுறுத்தி வருகிறது. இதனால் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி முடித்துள்ளார்.

இந்நிலையில் தொகுதி பங்கீட்டுக்கு முன்பே புதுச்சேரியில் தி.மு.க.வினர் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ய தொடங்கினர். அமாவாசை நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய சிறந்த நாளாக கருதினர். எனவே தி.மு.க. வினர் பெரும்பாலானோர் நேற்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. எனினும் இரு கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகள் நேற்று தனித்தனியே தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி உடன்பாடு எட்டப்பட்ட பிறகு, போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனுவை திரும்ப பெற்று கொள்ளலாம் என அரசியல் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 16-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய போது யாரும் மனுவை தாக்கல் செய்யவில்லை. நேற்று சுயேச்சைகள் ஒரு சிலரே வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மறுநாள் (24-ந் தேதி) மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 26-ந் தேதி மனுக்களை திரும்ப பெறுவ தற்கு கடைசி நாளாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com