"சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்" - எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு

சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளார்.
"சிஏஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக ஓரணியில் திரளுங்கள்" - எதிர்க் கட்சிகளுக்கு ப.சிதம்பரம் அழைப்பு
Published on

கொல்கத்தா,

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பில், நாட்டு நலனுக்காக சிஏஏ, என்.பி. ஆர் மற்றும் என். ஆர்.சி-யை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மோடி அரசு தற்போது தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) குறித்து பேசிவருகிறது. என்.பி.ஆர். என்பது வேறொன்றுமில்லை, மாறுவேடத்தில் உள்ள என்.ஆர்.சி.தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், அது உள்ளடக்கி உள்ள மதிப்புகளைப் பாதுகாக்கவுமே நாம் போராடுகிறோம் என்பதுதான் விரிவான பார்வையாகும். எனவே, இதற்காகப் போராடும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். நிறைய கட்சிகளை இணைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முயற்சி செய்தார். அதில் 20 கட்சிகள் பங்கேற்றன. சிலர் பங்கேற்கவில்லை. மறுபடியும் ஒரு கூட்டம் நடைபெறலாம். அதில் அவர்கள் பங்கேற்கலாம். நாங்கள் ஒன்றாக போராடுகிறோமா என்பது முக்கியமல்ல. நாங்கள் அனைவரும் போராடுகிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com