அரசியல் ஒலி பெருக்கி

அரசியல் நிலவரும் குறித்து பல்வேறு கட்சிகளின் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல் ஒலி பெருக்கி
Published on

அரசியலமைப்புக்கு எதிராக இடஒதுக்கீடு

கர்நாடகத்தில் அரசியலமைப்புக்கு எதிராக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு இருந்த இடஒதுக்கீட்டை பிடுங்கி மற்ற சமுதாயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கிறது. இடஒதுக்கீடு விவகாரம் பா.ஜனதாவுக்கு எதிர் வினையை ஏற்படுத்தும். ஏனெனில் ஜனநாயகத்திற்கும், விதிமுறைகளைமீறியும் இடஒதுக்கீட்டை அரசு அறிவித்துள்ளது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும்.

-சித்தராமையா, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்.

பெலகாவியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

பெலகாவி மாவட்டத்தில் மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன. இந்த 18 தொகுதிகளில், 10-ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது உறுதி. பெலகாவியில் 3 தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பிரச்சினை இருந்து வருகிறது. சீட் வழங்கும் விவகாரத்தில் அனைவருடனும் ஆலோசித்து ஒரு மித்த முடிவு எடுக்கப்படும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து காங்கிரசின் வெற்றிக்காக உழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

-சதீஸ் ஜார்கிகோளி,கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர்.

எலுமிச்சை பழம் வேலை செய்யாது

கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எந்த ஒரு எலுமிச்சை பழமும் வேலை செய்யாது. எலுமிச்சை பழம் பல்டி அடிக்க ஆரம்பித்து விட்டது. ஒலேநரசிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியும், மிரட்டியும் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த முறை அவர்களது (எச்.டி.ரேவண்ணா) ஆட்டம் வெற்றி பெறாது. அதற்கான சாத்தியமும் இல்லை. எலுமிச்சை பழமும் வேலை செய்ய போவதில்லை.

-டி.கே.சுரேஷ், காங்கிரஸ் எம்.பி..

பா.ஜனதா அரசைமக்கள் தூக்கி எறிவார்கள்

பா.ஜனதா ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. பா.ஜனதா தலைவர்களின் வாயில் இருந்து வருவது அனைத்தும் பொய். பொய்யை தவிர வேறு எதையும் பா.ஜனதா தலைவர்கள் பேச மாட்டார்கள். மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் மாட்டார்கள். வெறும் ஊழலில் ஈடுபடுவது மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் நடந்தது. பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். நடைபெற உள்ள தேர்தலில் அது கண்டிப்பாக நடக்கும்.

-மகாதேவப்பா, காங்கிரஸ் முன்னாள் மந்திரி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com