சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சித்து மூஸ் வாலா மரணத்தில் அரசியல் செய்யக்கூடாது - அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் ஜவஹர் கே கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடகர் சித்து மூஸ் வாலா மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். இதில், சித்து உயிரிழந்தார்.

இந்த நிலையில் பாடகர் சித்து மூஸ் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

பஞ்சாபில் என்ன சம்பவங்கள் நடந்தாலும் அதைச் சுற்றி அரசியல் இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது.

பஞ்சாப் முதல் மந்திரி இந்த விவகாரத்தில் தங்களால் இயன்றவரை முயற்சிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com