ஷரத்தா கொலை வழக்கு: அப்தாப் அமீனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது

டெல்லியில் வசாயை சேர்ந்த இளம்பெண் ஷரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஷரத்தா கொலை வழக்கு: அப்தாப் அமீனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது
Published on

மும்பை,

டெல்லியில் வசாயை சேர்ந்த இளம்பெண் ஷரத்தாவை அவரது காதலன் அப்தாப் அமீன் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அப்தாப் அமீன், ஷரத்தாவை கொலை செய்து 35 துண்டுகளாக உடலை வெட்டி வீசியவர் ஆவார். ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார் டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், கடந்த 10-ந் தேதி முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அப்தாப்பிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஷாரத்தாவை கொலை செய்தது ஏன்? என்பது உள்ளிட்ட வழக்குக்கு தேவையான கேள்விகள், அவரிடம் கேட்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com