வால்மீகி சமூகத்தை பற்றி சர்ச்சை கருத்து: பிரபல வலைதள வசீம் ரசா கைது

வால்மீகி சமூகம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய 'மிஸ்டர் பிலிபித்' என்றழைக்கப்படும் வசீம் ரசாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
வால்மீகி சமூகத்தை பற்றி சர்ச்சை கருத்து: பிரபல வலைதள வசீம் ரசா கைது
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் உள்ள நவுகவான் பக்தியா கிராமத்தை சேர்ந்தவர் வசிம் ராசா.இவர் சமூக வலைதளங்களில் "மிஸ்டர் பிலிபித் என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். இவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில், வசீம் ரசா பிலிபிட் புலிகள் காப்பகத்திற்கு சுற்றுலா சென்றிருந்தபோதுதான் அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை எடுத்துள்ளார். மிஸ்டர் பிலிபிட்' என்ற தனது சமூக வலை தள பக்கத்தில் வால்மீகி சமூகத்தை மிகவும் இழிவாகவும், ஆட்சேபனைக்குரிய வார்த்தைகளாலும் விமர்சித்திருந்தார். அந்த வீடியோவில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அது வைரலானது.

இதனை தொடர்ந்து நேற்று அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் கடும் கோபமடைந்தனர். நகசாவில் கூடிய மக்கள் ஒன்று திரண்டு முதலில் ஊர்வலமாக சென்றனார். பின்னர் நகரின் முக்கிய இடமான காஸ் சவுகராவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த மூத்த அதிகாரிகள் பலத்த போலீஸ் படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வசீம் ரசா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த பிறகு அந்த சமுகத்தை சோர்ந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அதே பகுதி சோர்ந்த நந்தன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த சுன்காரி போலீசார் உடனடியாக ரசா கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கபட்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் போடப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com