தமிழ்நாட்டில் ஆக.1இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வீட்டின் வசதிகள், நிலைகள் குறித்து 33 கேள்விகள் கேட்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு
Published on

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-க்குப் பிறகு 2021-ல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு கோவிட் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது 2025-2026 காலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

இந்திய வரலாற்றில், 2025-26 கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் நடைபெறுகிறது. மக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை மொபைல் செயலி மூலம் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கும். இது தரவுகளை விரைவாகச் சேகரிக்கவும், துல்லியமாகப் பகுப்பாய்வு செய்யவும் உதவும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் நிதி, மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படுகிறது. எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதைத் தீர்மானிக்க இது அவசியம் ஆகும்.

பல்வேறு மாநிலங்களிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறன. புதுவையில் இன்று முதல் இந்த பணிகள் ஆரம்பமாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 33 கேள்விகள் கேட்கப்படும். மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com