"மின்வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு" - மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை

காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படாததாலே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற மத்திய மந்திரியின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
"மின்வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு" - மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை
Published on

பெங்களூரு,

காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படாததாலே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்ற மத்திய அமைச்சரின் பேச்சு விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

காநாடக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருப்பதால், பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினர் யாத்திரை என்ற பெயரில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

மேலும், பிரதமர் மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடகாவில் பிரசாரம் செய்த மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரசின் இலவச மின்சாரம் வாக்குறுதியை விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரமே வழங்கப்படவில்லை எனக் கூறிய பிரகலாத் ஜோஷி, பிரதமர் மோடி ஆட்சியிலே கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் கிடைக்கிறது என்றார். காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் வழக்கப்படாததாலே, மக்கள் தொகை அதிகரித்தது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இது முட்டாள்தனமான கருத்து என்றும், தோல்வி முகம் தெரிவதால் நிலையை இழந்து மத்திய அமைச்சர்கள் இவ்வாறு பேசுகிறார்கள் என்றும் விமர்சித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com