ஆபாச பட நடிகை போல் இருப்பதாக கூறி மனைவியை கொடுமை படுத்தும் கணவன்

தன்னை, ஆபாச பட நடிகை போல் இருப்பதாகக் கூறி கணவர் துன்புறுத்துவதாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆபாச பட நடிகை போல் இருப்பதாக கூறி மனைவியை கொடுமை படுத்தும் கணவன்
Published on

பெங்களூர்

கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் உள்ள சன்னப்பட்டனாவைச் சேர்ந்தவர் கந்தராஜ். இவர் காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள், ஞானபாரதியில் உள்ள மாரியப்பனபாளையாவில் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் கணவர் மீது ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் மனைவி. அதில், தனது கணவரின் நடவடிக்கையில் சமீபகாலமாக மாற்றம் தெரிகிறது. அவர் மாண்டியாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை எனக்குத் தெரியாமல் திருமணம் செய்திருக்கிறார். என்னை, ஆபாச பட நடிகை போல இருப்பதாகக் கூறி அடிக்கடி டார்ச்சர் செய்தார். அதோடு, ஆபாச படத்தையும் பார்க்க வைத்து கொடுமை படுத்தினார். என்னைக் கொடுமை படுத்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com