ஆபாச காட்சிகள்- 18 ஓ.டி.டி. தளங்களை முடக்கிய மத்திய அரசு

தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆபாச காட்சிகள்- 18 ஓ.டி.டி. தளங்களை முடக்கிய மத்திய அரசு
Published on

புதுடெல்லி,

ஓ.டி.டி. தளங்கள் சிலவற்றில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சித்தரிக்கப்பட்டு இருந்ததை மத்திய அரசு கண்டறிந்தது. இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓ.டி.டி. தளங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

மேலும் முடக்கப்பட்ட ஓ.டி.டி. தளங்களுக்கு சொந்தமான 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன. பெண்களை அவதூறாக சித்தரிப்பது, ஐடி சட்டப்பிரிவு உள்ளிட்டவற்றின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com