ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்


ஆபாச வீடியோ விவகாரம்: கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ் சஸ்பெண்ட்
x

தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் ஆவார். இவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது விமான நிலையத்துக்கு போலீஸ் வாகனத்தை ராமசந்திர ராவ் அனுப்பி வைத்திருந்தார். இதனால் தங்கம் கடத்தி வந்த ரன்யா ராவை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்யாமல் பலமுறை அனுப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார்.

கடந்த ஆண்டு(2025) ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது. அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த தங்கம் கடத்தல் வழக்கால் மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக (தலைமை) வாய்ப்பு இருந்தும், அது பறிபோய் விட்டது.

இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார். இதன்மூலம் பணியில் இருக்கும்போதே, அவர் பெண்களுடன் சல்லாபத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.

3 வீடியோக்களில் இருக்கும் பெண்களின் முகங்கள் மறைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் யார்? என்பது தெரியவில்லை. அந்த 3 வீடியோக்களில் இருக்கும் பெண் ஒருவரா?, அல்லது வெவ்வேறு பெண்களா? என்பதும் தெரியவில்லை. ஆனால் அப்பெண்கள் விருப்பப்பட்டு தான் ராமசந்திர ராவுடன் பழகுவது போன்று வீடியோவில் காட்சிகள் இருக்கிறது.

அந்த வீடியோக்களை ராமசந்திர ராவே எடுத்தாரா?, அல்லது வேறு யாரும் ரகசியமாக எடுத்து வெளியிட்டு உள்ளார்களா? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் 3 வீடியோக்களின் பின்னணியில் இசை, பாடல் ஒலிப்பது தெரியவந்துள்ளது. இதனால் ரகசியமாக பெண்களுடன் ராமசந்திர ராவ் இருப்பதை யாரோ மர்மநபர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணை நடத்தினால் மட்டுமே, அந்த வீடியோவில் இருக்கும் பெண்கள் பற்றியும், மற்ற தகவல்கள் பற்றியும் தெரியவரும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்களுடன் ஆபாச செயலில் ராமசந்திர ராவ் ஈடுபட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வகிறார்கள்.

இந்த நிலையில், சீருடையில் பெண்களுடன் லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story