தபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரி

கோலார் தங்கவயலில் தபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரி
Published on

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயலில் தபால் நிலையத்தை சொந்த செலவில் சீரமைத்த அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தபால் நிலையம்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் ஆங்கிலேயர் காலத்திலேயே தபால் நிலையங்கள் தொடங்கப்பட்டன. தற்போது கோலார் தங்கவயலில் 9 தபால் நிலையங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி துணை தபால் நிலையம் 10-க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆதார் அட்டை, ஓய்வூதியம் பெற மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதனால் முதலில் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் மட்டும் ஆதார் அட்டையை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் புதிதாக தபால் அதிகாரியாக ரகுநந்தன் என்பவர் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றபோது தபால் நிலைய கட்டிடம் சிதிலமடைந்து கிடந்ததை பார்த்தார். அதையடுத்து அவர் தனது சொந்த நிதியையும், பலரிடம் இருந்து நிதி பெற்றும் தபால் நிலைய கட்டிடத்தை சீரமைத்தார்.

பாராட்டு

தபால் நிலையத்திற்கு வரும் முதியவர்கள் உள்பட பலர் அமரும் வகையில் இருக்கைகள் அமைத்துக் கொடுத்துள்ளார். அத்துடன் 1917-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தங்கச்சுரங்க நிர்வாகத்திற்கு ரூ.600 வாடகை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அவர் பாதுகாத்து வைத்துள்ளார். மேலும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று தபால் நிலையத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு தனது சொந்த செலவில் சிற்றுண்டி வழங்கி வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com