முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு

தேர்வு தேதி, இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்டு மாதம் நடக்க வாய்ப்பு
Published on

புதுடெல்லி,

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் 23-ந் தேதி நடக்க இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாள் இரவு, அத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக திடீரென அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, முதுநிலை நீட் தேர்வு நடத்துவதற்கான தயார்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தின.

இதையடுத்து, ஆகஸ்டு மாத நடுவில் முதுநிலை நீட் தேர்வு நடக்கக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு தேதி, இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com