முதுநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தள்ளிவைப்பு..!

மார்ச் 12-ந் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மார்ச் 12-ந் தேதி நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்பு களுக்கான நீட் தேர்வை 8 வாரங்களுக்கு மத்திய அரசு தள்ளி வைத்துள்ளது.

இந்த ஆண்டு முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கான நீட் தேர்வு மார்ச் 12-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்வை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் பிற்பகலில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. மனு விசாரணைக்கு வருவதற்கு சில மணி நேரங்களே இருந்தபோது, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை மத்திய அரசு தள்ளி வைத்தது. 6 முதல் 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உத்தரவின்பேரில், சுகாதார பணிகளுக்கான தலைமை இயக்குனர் இதற்கான ஆணையை பிறப்பித்தார். அதில், முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதியும், கடந்த ஆண்டு முதுநிலை நீட் தேறியவர்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு தேதியும் ஒரே நாளில் வருவதால் நீட் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com