நீட் தேர்வை தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் - பிரதமருக்கு, கல்வியாளர்கள் கடிதம்

நீட் தேர்வை தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று பிரதமருக்கு, கல்வியாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வை தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் - பிரதமருக்கு, கல்வியாளர்கள் கடிதம்
Published on

புதுடெல்லி,

கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் நீட் மற்றும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

ஆனால் தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்து உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக 150-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இவர்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்கள் ஆவார்கள்.

கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

சிலர் தங்களுடைய சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயற்சிக்கிறார்கள். மருத்துவ படிப்புக்கான நீட் மற்றும் பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வுகளை மேலும் தள்ளிவைத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது.

இளைஞர்கள், மாணவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அடுத்து தங்கள் கல்வியை தொடருவதற்காக வீட்டில் ஆவலுடன் காத்து இருக்கிறார்கள். எனவே இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர்கள் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com