விவசாயிகளுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு

விவசாயிகளுடன் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
விவசாயிகளுடன் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளைக்கு தள்ளிவைப்பு; மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 9 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இருக்கிறது. ஆனால் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றுக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை.

எனவே இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடர முடிவு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 10-வது சுற்று பேச்சுவார்த்தையை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த இரு தரப்பும் கடந்த சந்திப்பின்போது முடிவு செய்திருந்தன. அதன்படி இந்த பேச்சுவார்த்தைக்காக இரு தரப்பும் தயாராகியும் வந்தன.

ஆனால் இன்று நடைபெற இருந்த இந்த பேச்சுவார்த்தையை நாளைக்கு (புதன்கிழமை) தள்ளிவைப்பதாக மத்திய அரசு நேற்று இரவு திடீரென அறிவித்தது. இன்றைக்கு பதிலாக நாளை பிற்பகல் 2 மணிக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடைபெறும் என வேளாண் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com