சொத்து தகராறில் நிகழ்ந்த விபரீதம்.. மூதாட்டி மீது வெந்நீரை ஊற்றிய பேத்தி

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
சொத்து தகராறில் நிகழ்ந்த விபரீதம்.. மூதாட்டி மீது வெந்நீரை ஊற்றிய பேத்தி
Published on: 

திருவனந்தபுரம்,

சொத்து தகராறில் மூதாட்டி மீது அவரது பேத்தியே வெந்நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடும்ப சொத்து

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த சடயமங்கலம் அரூர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வதி (வயது 49). இவரது வீட்டில் அவரது தாயார் ராதாமணியும் வசித்து வருகிறார். அஸ்வதிக்கு அமிர்தா (18) என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் அஸ்வதி தனது தாயாரிடம் குடும்ப சொத்தை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

படுகாயம்

சம்பவத்தன்று தனது தாயாரை வீட்டில் இருந்து வெளியேற்றிய அஸ்வதி, தனது மகளின் உதவியுடன் தாயார் ராதாமணி (69) மீது வெந்நீரை ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சடயமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு பின் அஸ்வினி தனது மகள் அமிர்தாவுடன் தலைமறைவானார்.

கைது

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சடயமங்கலம் போலீசார் தாய்-மகள் இருவரையும் தேடிவந்த நிலையில் நேற்று அமிர்தாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது தாயார் அஸ்வினி கூறியதால் வெந்நீரை பாட்டி மீது ஊற்றியதாக தெரிவித்தார். இதையடுத்து தலைமறைவான அஸ்வினியை போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com