பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி - அமைச்சர் சுரேஷ் பிரபு

புதிய ரயில் பாதை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று கூறினார்.
பயணியர் குறைத் தீர்க்க புதிய செயலி - அமைச்சர் சுரேஷ் பிரபு
Published on

குவஹாத்தி

அஸ்ஸாம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையேயான ரயில் பாதையை துவக்கி வைத்த அமைச்சர், புதிய அகலப் பாதைகளை அருணாச்சலப் பிரதேசத்தில் அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நாகர்லாகுன் - குவஹாத்தி இடையிலான புதிய சதாப்தி ரயிலையும் துவக்கி வைத்தார். அப்போது பேசும் போது இந்திய ரயில்வே அதன் வளர்ச்சி திட்டங்களின் வேகத்தை முடுக்கி விட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் ரூ. 3.5 இலட்சம் கோடிகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது ரூ. 90,000 கோடிகளை வடகிழக்கு மாநிலங்களின் திட்டங்களுக்காக செலவழித்து வருகிறோம் என்றார் அமைச்சர்.

இந்திய ரயில்வே சிறப்பான இணைப்பு வசதிகளை மட்டுமின்றி சிறந்த பயணியர் அனுபவத்திற்கும் உத்தரவாதம் அளிக்க விரும்புகிறது. பயணியர் குறைத் தீர்ப்பிற்காக புதிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்யவுள்ளது என்றார் அவர். ஏழு திட்டங்களில் சுமார் 594 கி.மீ தூரத்திற்கான புதிய சர்வேக்களையும் அவர் துவக்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com