பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் நேற்று முன்தினம் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப்பகுதியில் இருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக இஸ்ரோ நேற்று அறிவித்து இருந்தது.

இதில் முக்கியமாக நிலவின் தரைப்பகுதியில் ரோவரின் இயக்கம் நேற்று தொடங்கியது. இதைப்போல லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே போன்ற கருவிகள் நேற்று இயக்கப்பட்டன.

இந்த நிலையில், பிரக்யான் ரோவரின் சோலார் பேனல் சூரியனை நோக்கி திரும்பிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. சாய்வு தளத்தில் இருந்து ரோவர் உருண்டு வரும்போது, ரோவரின் சோலார் மின் தகடுகள் திரும்பியுள்ளது என்றும், ரோவர் இயங்குவதற்கு தேவையான மின்சார சக்தியை பெறுவதற்காக சோலார் மின் தகடு சூரியனை நோக்கி திரும்பியது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், சாய்வு தளம் மூலம் லேண்டரில் இருந்து ரோவர் கலன் எளிமையாக நிலவில் இறங்கியதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com