நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப் அறிக்கை

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும்: ஐ.எம்.எப் அறிக்கை
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டில் 7.3 சதவீதமாகவும் அடுத்த ஆண்டு (2019) 7.4 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நிதி ஆணையமான (ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.

2017 -ல் 6.7 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி 2018- ல் 7.3 சதவீதமாகவும், 2019 ல் 7.4 சதவீதமாக இருக்கும். ஜி.எஸ்.டி அமல் போன்ற திட்டங்களால் முதலீடு அதிகரிப்பு, தனியார் நுகர்வு ஆகியவை வலுப்பட்டதன் காரணமாக பொருளாதர வளர்ச்சி அதிகரித்துள்ளதாக ஐ.எம்.எப் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி ஆணையத்தின் கணிப்புப்படி, பொருளாதாரம் வளரும் பட்சத்தில், உலகில், வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம் என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைப்பதோடு, பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியை விட நமது வளர்ச்சியானது நடப்பாண்டில் 0.7 சதவீதமும், 2019 ல் 1.2 சதவீதமும் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com