

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்தே மாணவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த நிலையில், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரியாக உள்ள பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை அமைச்சகம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, "இந்தப் பொறுப்பை பணிவுடனும் கடமை உணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமருக்கு நன்றி. கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி, கல்வித்துறையில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார். புதிய கல்வி அமைப்பில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. பிரதமரின் வழிகாட்டுதலின்படி முழு அர்ப்பணிப்புடன் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன்" என்றும் அவர் தெரிவித்தார்.