காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை

காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ஹமீத் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. #PranabMukherjee #ArvindKejriwal
காங்கிரஸ் நடத்தும் இப்தார் விருந்துக்கு பிரணாப் முகர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை
Published on

புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 13 ம் தேதி புதுடெல்லியில் இஃப்தார் விருந்து வழங்க உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் பட்டியலில் பல முக்கிய பிரபலங்கள் விடுபட்டு இருப்பதாக ஜி நியூஸ்( Zee News) தகவல் வெளியிட்டு உள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு கால இடைவெளியில் காங்கிரஸ் கட்சி இப்தார் விருந்தை ஏர்பாடு செய்து உள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சி தாஜ் பேலஸ் ஒட்டலில் நடைபெற்ற உள்ளது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என செய்தி வெளியிட்டு உள்ளது.

பிரணாப் முகர்ஜி, நாக்பூரிலுள்ள ஆர்.எஸ்.எஸ். நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில நாட்களுக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com