கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னானந்தாவுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கும்

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னானந்தாவுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னானந்தாவுக்கு மத்திய அரசு ஊக்கத் தொகை வழங்கும்
Published on

புதுடெல்லி,

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் நேற்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோரை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

செஸ் போட்டியில் மிகச்சிறிய வயதில் கிராண்ட் மாஸ்டராகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சென்னை சிறுவன் பிரக்னானந்தாவும், அவருடைய அக்காவும் பெற்ற பதக்கங்களின் பட்டியலை மத்திய விளையாட்டுத்துறை மந்திரியிடம் எடுத்துரைத்தேன்.

அந்த சிறுவர்களுக்கு நான் அளித்த ஊக்கத்தை மத்திய அரசும் தரும் என்று கூறிய மத்திய மந்திரி, விளையாட்டு வீரர்கள் மீது தனிக்கவனம் செலுத்த பிரதமர் கூறியிருப்பதால் அந்த அக்காதம்பிக்கு பரிசு, பயிற்சி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். ஊக்கத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்பது எனது கணிப்பு.

பா.ஜனதாவுக்கு நான் தலைவர் ஆனதில் இருந்தே என்னைப்பற்றி பல யூகங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த முறை, தமிழக தலைமை மாற்றம் என்கிற அந்த யூகத்துக்கு மிகச்சரியான விளக்கத்தை அளித்து எனது பலத்துக்கு மேலும் பலம் சேர்த்த தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் முரளிதரராவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை சந்திப்பதற்கு தான். அவரது வருகை 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெறுவதற்கு ஊக்கமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நாங்கள் ஆலோசனை சொல்லும் வாய்ப்பாகவும் அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com