

புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக பிரஷாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-
லகிம்பூர்கெரி விவகாரத்தை அடிப்படையாக வைத்து மிகப்பழமையான கட்சிக்கு உடனடியான, விரைவான புத்துயிர் கிடைக்கும் என எதிர்பார்த்த சிலருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைக்கும். பழமையான கட்சியில் ஆழமாக வேர்விட்ட பிரச்சினைகளுக்கும், கட்டமைப்பு பலவீனத்துக்கும் துரதிர்ஷ்டமாக விரைவான தீர்வு ஏதும் இல்லை எனப் பதிவிட்டுள்ளார்.