நானே விஷ்ணு... நானே கிருஷ்ணா...! 2 மனைவிகள், பாம்பு படுக்கையென ஊரையே ஏமாற்றிய தமிழக சாமியார்...!

நான் தான் மகாவிஷ்ணு.. 2 மனைவிகள், பாம்பு தல படுக்கையென ஊரையே நம்ப வைத்த சாமியார் போலீசார் எடுத்த அதிரடி முடிவு!
நானே விஷ்ணு... நானே கிருஷ்ணா...! 2 மனைவிகள், பாம்பு படுக்கையென ஊரையே ஏமாற்றிய தமிழக சாமியார்...!
Published on

ஐதராபாத்

திருவண்ணாமலை செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டி தொட்டி மண்டலத்தில் ஆசிரமம் நடத்தி வந்தார். நானே பரமாத்மா கிருஷ்ணரும் நானே என்றும், விஷ்ணுவும் நானே என கூறி பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார்.

சுரேசுக்கு இரண்டு மனைவிகள். 5 தலை பாம்பு போல் படுக்கை அமைத்து தனது மனைவிகள் ஸ்ரீதேவி, மூதேவி என கூறி வந்தார்.சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே சிலர் தகவல் பரப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்தது. சந்தோஷ் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். .

கடந்த 3 நாட்களாக சாமியார் குறித்து அந்த பகுதியில் அதிகமாக விளம்பரம் செய்யப்பட்டது இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாமியாரை பார்க்க கூட்டம் அதிகமாக வந்தது. பகுண்டா வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தமிழக சுவாமியை தரிசனம் செய்ய குதித்தனர். இதனால், கடவாலா ராய்ச்சூர் சாலை அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தநான் தான் மகாவிஷ்ணு.. 2 மனைவிகள், பாம்பு தல படுக்கையென ஊரையே நம்ப வைத்த சாமியார்..; போலீசார் எடுத்த அதிரடி முடிவு!

தகவலறிந்து வந்த கொடிதொட்டி போலீசார், சந்தோஷ் சுவாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com