கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை

கர்ப்பிணி கொலை வழக்கு: தொழிலாளிக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலிக்கும் தூக்கு தண்டனை

கேரளாவில் திருமணமான ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபரை வற்புறுத்தினார்.
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம், நிலம்பூரை சேர்ந்தவர் பிரபீஷ் (வயது 37), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உண்டு. இந்தநிலையில் பிரபீஷ்க்கும் அனிதா(32) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அனிதா கர்ப்பமானார். இதனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபீஷை வற்புறுத்தினார்.

இதனால் பிரபீஷ் தனது மற்றொரு கள்ளக்காதலியான ஆலப்புழை கைநகரியை சேர்ந்த ரஜனி(38) என்பவருடன் சேர்ந்து அனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந்தேதி ரஜனி, அனிதாவின் வாயை பொத்திக்கொள்ள பிரபீஷ் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரபீஷ்க்கு ஆலப்புழை கூடுதல் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு கடந்த 23-ந்தேதி தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 2-வது குற்றவாளியான ரஜனி நேற்று ஆலப்புழை மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com