சிக்கிம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்

சிக்கிம் மாநில முதல் மந்திரியாக 2-வது முறையாக பிரேம் சிங் தமாங் பதவியேற்றுக்கொண்டார்.
சிக்கிம் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்
Published on

காங்டாக்,

சிக்கிம் மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தல் முடிவில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 இடங்களில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இதனை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங், 2-வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சிக்கிம் மாநில முதல் மந்திரியாக 2-வது முறையாக பிரேம் சிங் தமாங் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து அவரது மந்திரி சபையில் உள்ள பிற மந்திரிகளும் பதவியேற்றுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com