

புதுடெல்லி,
முத்தலாக் முறையில் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதற்கு எதிராக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கான சட்டதிருத்தம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் மத்திய மந்திரிசபை மீண்டும் அவசர சட்டம் பிறப்பித்தது. அதேபோல இந்திய மருத்துவ கவுன்சில் அவசர சட்டம், கம்பெனிகள் அவசர சட்டம் ஆகியவையும் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த 3 அவசர சட்டங்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார்.