பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!

பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
பீகார் சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு..!
Published on

பாட்னா,

பீகார் மாநில சட்டமன்ற கட்டிடத்தின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசு தலைவர் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக நேற்று பீகார் சென்றடைந்தார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக ஜனாதிபதி போதி மரக்கன்றை நாட்டினார். மேலும், நினைவுத்தூண் அமைத்திட அடிக்கல் நாட்டினார். இந்த நினைவுத்தூண் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்தை போன்ற அமைப்பில் உலோகத்தால் உருவாக்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்களின் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு. பீகார் மண் ஒரு பொற்களஞ்சியம் ஆகும். இங்குள்ள மக்களின் அன்பு அளப்பரியது. இங்கு வரும்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று தனது உரையில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com