

புதுடெல்லி,
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனைத்து மாநில கவர்னர்கள், துணைநிலை கவர்னர்கள், யூனியன்பிரதேச நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று கலந்துரையாடினார்.
அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கொரோனா வைரஸ் தாக்குதல் சவால்களை சந்தித்துவரும் அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன்னணியில் இருந்து பாடுபடும் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் கலந்துகொண்டார்.