79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை


79- வது சுதந்திர தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
x
தினத்தந்தி 15 Aug 2025 2:24 PM IST (Updated: 15 Aug 2025 5:47 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்

புதுடெல்லி,

இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேத் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

1 More update

Next Story