சபரிமலைக்கு வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதியை வரவேற்க தேவசம்போர்டு தயாராக உள்ளதாக கேரள மந்திரி தெரிவித்தார்.
சபரிமலைக்கு வருகை தரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

சபரிமலை,

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த மே மாதம் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக அவரது பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் சபரிமலைக்கு வரவுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு மந்திரி வி.எஸ். வாசவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,

சபரிமலையில் மலையாள "துலாம்" மற்றும் தமிழின் "ஐப்பசி" மாதப்பிறப்புகளின் பூஜைக்காக அடுத்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்படும். 21- ம் தேதி வரை நடை திறந்திருக்கும். இந்த பூஜைக்காலத்தின் நிறைவு நாளில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார். ஜனாதிபதியை வரவேற்க தேவசம்போர்டு தயாராக உள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com