குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணிக்கு ஜனாதிபதியின் உரை ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் குடியரசு தினம் நாளை மறுநாள்(26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை(நாளை) ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த உரை ஆகாசவாணியில் நாடு முழுவதும் மாலை 7 மணி முதல் ஒலிபரப்பப்படும். மேலும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் இந்தியில் ஒளிபரப்பப்பட்டு, தொடர்ந்து ஆங்கில பதிப்பு ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்களில் பிராந்திய மொழிகளில் ஜனாதிபதியின் உரை ஒளிபரப்பு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com