

டெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக நாளை ஆந்திராவுக்கு செல்ல உள்ளார். டெல்லியில் இருந்து நாளை மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் புறப்படும் ஜனாதிபதி திரவுபதி முர்மு மாலை 6.30 மணியளவில் ஆந்திரா செல்கிறார். பின்னர் அங்கிருந்து விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோவிலில் ஜனாதிபதி முர்மு சாமி தரிசனம் செய்கிறார்.
இதனை தொடர்ந்து நாளை மறுதினம் விஜயவாடாவில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் நடைபெறும் கிராமப்புற பெண் கைவினை கலைஞர்களுக்கு வாய்ப்புகளையும், கைவினைப்பொருட்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் சரஸ் ஆஜீவிகா மேளாவிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொள்கிறார்.
இதையடுத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முர்மு கலந்துரையாடுகிறார். இதனை தொடர்ந்து ஆந்திர பயணத்தை நிறைவு செய்யும் ஜனாதிபதி முர்மு நாளை மறுதினம் மாலை 3 மணியளவில் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.