சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றுக் கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றார். இதற்கிடையில், மிக மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்தார். அதை ஏற்று, புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை கடந்த மாதம் 24-ந் தேதி மத்திய அரசு நியமித்தது.

இந்நிலையில், சுப்ரீம் கேர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சஞ்சீவ் கன்னா அடுத்த ஆண்டு (2025) மே 13-ந் தேதி வரை பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சஞ்சீவ் கன்னா கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com