சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு: ஜனாதிபதி திரவுபதி முர்மு

சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உலக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஆன்லைன் சர்ச்சை தீர்வு வலைத்தளம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு பேசியதாவது:-
சிறு, குறு நிறுவனங்கள் நிதி தட்டுப்பாடு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி, பணப்பட்டுவாடாவில் தாமதம் உள்ளிட்ட சவால்களை சந்தித்து வருகின்றன. மத்திய அரசின் முயற்சிகளால், பதிவு செய்யப்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொருட்கள் வாங்குவோருக்கும், சிறு, குறு நிறுவனங்களுக்கும் இடையிலான பணப்பட்டுவாடா தாமதம் குறித்த சர்ச்சைகளுக்கு இப்போது தொடங்கப்பட்டுள்ள வலைத்தளம் விரைந்து தீர்வு காணும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story






