ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 மாநிலங்களுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும், பிரம்ம குமாரிகள் நடத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 மாநிலங்களுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம்
Published on

புனே

ஜனாதிபதி திரவுபதி முர்மு மராட்டியம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதன்படி இன்று அவர் மராட்டிய மாநிலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

அவர், மும்பை நகரிலுள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். மறுநாள் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியிலும், பிரம்ம குமாரிகள் நடத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

Also Read
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வைத்து அமெரிக்காவுடன் விளையாடினால் கூடுதல் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 மாநிலங்களுக்கு இன்று முதல் சுற்றுப்பயணம்

இதன்பின்னர் 26-ந்தேதி ஜார்கண்ட் செல்லும் திரவுபதி முர்மு, ஜாம்ஷெட்பூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீஜெகநாதர் கோவில் பூமி பூஜை ஒன்றில் பங்கேற்கிறார். இதன்பின் 27-ந்தேதி அவர் ராஜஸ்தானின் பொக்ரான் நகருக்கு செல்கிறார். இந்திய விமான படை நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com