முதல் முறையாக சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு


முதல் முறையாக சபரிமலை செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா செல்ல உள்ளார்.

திருவனந்தபுரம்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வழக்கமான பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி வருகையை ஒட்டி, சபரிமலை கோவிலில் சீரமைப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதன் முறையாகும்.

1 More update

Next Story