சுவாமி விவேகானந்தர் நிறுவிய பேலூர் மடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு

சுவாமி விவேகானந்தர் நிறுவிய பேலூர் மடத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்று பார்வையிட்டார்.
சுவாமி விவேகானந்தர் நிறுவிய பேலூர் மடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி முர்மு
Published on

பேலூர் மடத்தில் ஜனாதிபதி

ஜனாதிபதி திரவுபதி முர்மு, மேற்கு வங்காள மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். முதல் நாளான நேற்று அவர் சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் இல்லங்களைப் பார்வையிட்டார்.

2-ம் நாளான இன்று அவர், 19-ம் நூற்றாண்டில் சுவாமி விவேகானந்தர் நிறுவிய பேலூர் மடத்துக்கு சென்றார். இந்த மடம்தான், ராமகிருஷ்ணா மடங்கள் மற்றும் ராமகிருஷ்ணா இயக்கத்தின் தலைமையிடம் ஆகும்.

காலை 8.45 மணிக்கு மாநில கவர்னர் ஆனந்த போசுடன் அங்கு சென்ற ஜனாதிபதி முர்முவை ராமகிருஷ்ணா இயக்கத்தின் பொதுச்செயலாளர் சுவிரானந்தஜி மகாராஜ் சுவாமியும், மாநில மந்திரி பிர்பக ஹன்ஸ்தாவும் வரவேற்றனர்.

விவேகானந்தர் அறையைப் பார்த்தார்

தொடர்ந்து ராமகிருஷ்ணர் ஆலயம், சாரதா தேவி ஆலயம் ஆகியவற்றுக்கு சென்று வழிபட்ட ஜனாதிபதி முர்மு, சுவாமி விவேகானந்தர் அறை, அவரது நினைவிடம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். அவர் பேட்டரி வாகனத்தில் சென்று பேலூர் மட வளாகம் முழுவதையும் பார்த்தார்.

ஜனாதிபதி முர்முவுக்கு ஒரு புடவையும், ஒருகூடை பழங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டன. காலை 9.20 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். ஜனாதிபதி முர்மு வருகையால் பேலூர் மடத்தில் இன்று காலை 10 மணி வரை பிற பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com