யூத புத்தாண்டு; ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து


யூத புத்தாண்டு; ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
x

யூத புத்தாண்டு ரோஷ் ஹஷனா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி,

உலகம் முழுவதும் யூத மதத்தினரின் புத்தாண்டு ரோஷ் ஹஷனா என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான யூத புத்தாண்டு ரோஷ் ஹஷனா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. யூத புத்தாண்டு வழக்கமாக 2 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இன்றும், நாளையும் யூத புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், யூத புத்தாண்டையொட்டி உலகம் முழுவதும் உள்ள யூத மதத்தினருக்கும், இஸ்ரேலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹர்சொகிற்கு வாழ்த்து தெரிவித்து திரவுபதி முர்வு வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்திய அரசு மற்றும் இந்திய மக்கள் சார்பாக உங்களுக்கும் (ஐசக்) யூத மதத்தினருக்கும் ரோஷ் ஹஷனா புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளர்ச்சி, உடல் நலனை கொண்டுவரட்டும்

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story