மேற்குவங்காள கவர்னர் பதவியில் இருந்து ஜெக்தீப் தன்கர் ராஜினாமா

மேற்குவங்காள கவர்னர் பதவியை ஜெக்தீப் தன்கர் இன்று ராஜினாமா செய்தார்.
மேற்குவங்காள கவர்னர் பதவியில் இருந்து ஜெக்தீப் தன்கர் ராஜினாமா
Published on

கொல்கத்தா,

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் 10-ந் தேதி முடிகிறது. அதற்கு முன்பாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்தாக வேண்டும். இதற்கான தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் கடந்த 5-ந் தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு நாளை மறுநாள் (19-ந் தேதி) கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப்பெறுவதற்கு 22-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

போட்டி இருந்தால் அடுத்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும்.

இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி சார்பில், மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கர் (வயது 71) போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்குவங்காள கவர்னர் பதவியை ஜெக்தீப் தன்கர் இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து மணிப்பூர் கவர்னர் இல.கணேசனுக்கு மேற்குவங்காள கவர்னர் பணியையும் கவனிக்க கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com