

புதுடெல்லி,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று காலை லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசுத் தலைவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.