

பனாஜி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதை முடித்து விட்டு டெல்லி திரும்பிய அவர் இந்தியாவின் கடலோர மாநிலங்களில் ஒன்றான கோவாவுக்கு செல்கிறார். அதன்படி வருகிற 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையிலான 3 நாட்கள் அவர் கோவாவில் சுற்றுப்பணம் மேற்கொள்கிறார்.
இந்த பயணத்தில் முக்கியமாக அவர், தலைநகர் பனாஜியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்தில் நடக்கும் சிறப்பு நிகழச்சியில் பங்கேற்கிறார். குறிப்பாக இந்த கடற்படை தளத்தின் வைரவிழா கொண்டாட்டத்துடன் இணைந்து 6-ந்தேதி நடைபெறும் சிறப்பு விழாவில் ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இந்த தகவல்களை மாநில தகவல் தொடர்புத்துறை வெளியிட்டு உள்ளது.