ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்

2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் செல்கிறார்.
ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்
Published on

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசம் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற டிசம்பர் 16-ந்தேதியை வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. கடந்த 1971-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள வெற்றி தினம் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி முதல்முறையாக வங்காளதேசம் செல்கிறார். 2 நாள் பயணமாக அங்கு செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறும் வெற்றி தின பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திரமோடி வங்காளதேசம் சென்று பொன் விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com