நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
Published on

புதுடெல்லி,

விவசாய விளைபொருட் கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா உள்ளிட்ட 3 வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் விவசாயிகள் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஜனாதிபதி ஒப்புதலையடுத்து அரசிதழில் வெளியிட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால், இந்த மசோதா சட்டமாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com