சிறப்பாக பணியாற்றிய சுங்க அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு

நடப்பாண்டில் சிறப்பாக பணியாற்றிய 29 சுங்க அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பாக பணியாற்றிய சுங்க அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது - மத்திய அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

குடியரசு தினவிழாவை முன்னிட்டு, மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் குடியரசு தினத்துக்கு முதல் நாள் அறிவிக்கப்படுகிறது. அந்தவகையில் நடப்பாண்டு 29 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி சுங்கத்துறை உதவி-கமிஷனர் ஏ வெங்கடேஷ் பாபு, சென்னை சுங்கத்துறை உதவி கமிஷனர் ஆனந்த் குமார் சவலம், மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை (ஜி.எஸ்.டி.) சென்னை கண்காணிப்பாளர் எல் அபர்ணா, கோவை மண்டல பிரிவு ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குனரகத்தின் மூத்த புலனாய்வு அதிகாரி எஸ்.கல்யாணி சுந்தரி நாகராஜன், சென்னை, வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகத்தின் மூத்த புலனாய்வு அதிகாரி கருணாகரன், சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் மூத்த புலனாய்வு அதிகாரி வி.பாலாஜி உள்பட 29 பேருக்கு ஜனாதிபதி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்று பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com