கர்நாடக ரெயில்வே போலீஸ்காரருக்கு ஜனாதிபதி விருது

கர்நாடக ரெயில்வே போலீஸ்காரர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
கர்நாடக ரெயில்வே போலீஸ்காரருக்கு ஜனாதிபதி விருது
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பல்லாரி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக ரபீ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 21-12-2019 அன்று ரெயில்வே பிளாட்பாரத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் புறப்பட்டு சென்ற ஒரு ரெயிலில் பயணி ஒருவர் ஓடி சென்று ஏற முயன்றார். அப்போது அவர் நிலைத்தடுமாறி நடைமேடையில் விழுந்தார். உடனே இதை கனித்த ரபீ ஓடிசென்று, அந்த பயணியை பத்திரமாக மீட்டார்.

இந்த சேவையை பாராட்டி அவர் ஜனாதிபதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் பயணியை காப்பாற்றிய போலீஸ்காரர் ரபீக்கு சான்றிதழும், பதக்கமும், ரூ.1 லட்சம் ரொக்கமும் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com