மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு

மகா விகாஸ் அகாடி ஆட்சியில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது பொய் வழக்கு போட்டு அவரை சிறையில் அடைக்க முயற்சி நடைபெற்றதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மகா விகாஸ் அகாடி ஆட்சியில் பொய் வழக்கு போட்டு பட்னாவிசை சிறையில் தள்ள முயற்சி - முதல்-மந்திரி ஷிண்டே குற்றச்சாட்டு
Published on

தொலைபேசி ஒட்டுக்கேட்பு

மகா விகாஸ் அகாடி ஆட்சிகாலத்தில் நடந்ததாக கூறப்படும் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கின் விசாரணையை முடித்துக்கொள்வதாக சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஐகோர்ட்டும் ஏற்றுக்கொண்டது. இதுகுறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நிருபர்களிடம் கூறியதாவது:- முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது. பா.ஜனதா தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை சிறையில் அடைக்க விரும்பியது.

பட்னாவிசை...

குறிப்பாக சுயேச்சை எம்.பி. நவநீத் ராணா. பா.ஜனதா தலைவர் நாராயண் ரானே எம்.பி. போன்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களை சிறையில் தள்ளுவதற்கு திட்டமிட்டது. அதேபோல தேவேந்திர பட்னாவிசையும் சிறையில் அடைக்க அவர்கள் முயன்றனர். தற்போது இந்த விஷயங்கள் தெளிவாகிவிட்டன. மராட்டிய மக்களுக்கு யார் சரி, யார் தவறு என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com