திருமணம் செய்துகொள்வதாக கூறி நர்சை பலாத்காரம் செய்து பணம் மோசடி - பாதிரியார் கைது

சாம் ஹார்ட்டுக்கும், பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்துகொள்வதாக கூறி நர்சை பலாத்காரம் செய்து பணம் மோசடி - பாதிரியார் கைது
Published on

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த வர் சாம் ஹார்ட்(வயது 42). இவர், திருச்சூர் மாவட்டம் இரிஞாலக்குடாவில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இதேபோல் அதேபகுதியை சேர்ந்த பெண். வெளிநாட்டில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது மதபோதகர் சாம் ஹார்ட்டுக்கும், பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சாம் ஹார்ட், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் பெண்ணிடம் இருந்து ரூ.16 லட்சம் பெற்றார். ஆனால் அவர் சொன்னபடி பெண்ணை திருமணம் செய்யவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து இரிஞாலக்குடா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சாம் ஹார்ட்டை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com