பிரசாதம் வழங்குவதுபோல் சிறுமிகளிடம் ஆபாச செயல்.. வீடியோக்களை வெளிநாட்டில் விற்ற பூசாரி

ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.

பிரசாதம் வழங்குவதுபோல் சிறுமிகளிடம் ஆபாச செயல்.. வீடியோக்களை வெளிநாட்டில் விற்ற பூசாரி
Published on: 

மதுரா

உத்தர பிரதேசத்தில் பூசாரி ஒருவர் பிரசாதம் வழங்குவதுபோல் சிறுமிகளிடம் ஆபாச செயலில் ஈடுபட்டு, அதனை வீடியோவாக எடுத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் உள்ள கிராமம் ஒன்றில் ஜெயிந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் ஒன்று உள்ளது. இதில், பூசாரியாக இருப்பவர் ஷியாம் பீகாரி.

ஆபாச வீடியோ

இவர், கோவிலுக்கு வரக்கூடிய, வயது வந்த சிறுமிகளிடம் பிரசாதம் தருகிறேன் என கூறி தனியாக அறைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அவர்களிடம் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். இப்படி, ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து உள்ளார்.

இந்த வீடியோக்களை வெளிநாடுகளில் வசிக்கும் தனிநபர்களிடம் விலைக்கு விற்று வந்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச போலீசாரின் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு இந்த தகவல் பகிரப்பட்டது.

சி.பி.ஐ. விசாரணை

இதுதொடர்பாக விசாரணை செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் கோவிலில் வைத்து அவரை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்டில் சி.பி.ஐ. தரப்பில், கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கலானது. இதனை தொடர்ந்து கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிபதி பிரிஜேஷ் குமார் முன்பு இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஷியாம் பீகாரியை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.43 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தகவலை வழக்கறிஞர் ராம்பால் சிங் நேற்று முன்தினம் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறினார்.

X